தற்செயலாக நிகழ்ந்த அதிசயம்.! ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.!

தற்செயலாக நிகழ்ந்த அதிசயம்.! ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.!


australian-pm-talk-about-republic-day

இந்தியா தனக்கான சட்டங்களை வரையறுத்து, அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தநிலையில் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று
இந்தியாவில்  72வது குடியரசு தின விழா,  கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவரது டுவிட்டர் பதிவில்,  இந்தியா-ஆஸ்திரேலியாவின் தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி. தேசிய நாள் மட்டுமல்லாமல், ஜனநாயகம், சுதந்திரம், பன்முகத்தன்மை என அனைத்தையும் இந்தியா -ஆஸ்திரேலியா பகிர்ந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.