"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
கொரோனா வைரசுக்கு கடைசி தேதி குறித்த நாடி ஜோதிடர்..! கொரோனா வைரஸ் எப்போது குறையும்? ஜோதிடரின் கணிப்பு.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், இந்த வைரஸ் வரும் மே 13-ஆம் தேதிக்கு பின் படிப் படியாக குறையும் என்றும் பிரபல நாடி ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்து, சாப்பாட்டிற்க்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் சற்று குறைவு என்றே கூறலாம்.
இந்நிலையில், கொரோனாவை தடுக்கவும், அதற்கு மருந்து கண்டுபிடிக்கவும் பலவேறு நாடுகள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம், மே, 13-ஆம் திகதிக்கு பின், படிப்படியாக குறையும் என்றும் இந்தியாவில் இந்த வைரஸ் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது எனவும், தமிழகத்தில் இருக்கும், வைத்தீஸ்வரன் கோவில் பிரபல நாடி ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரில், தையல்நாயகி அம்மாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பது மிகவும் பிரபலமானது. அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி சாதாரண மக்களும் இங்கு நாடி ஜோதிடம் பார்த்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் நாடி ஜோதிடர் டாக்டர் சிவசாமி தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மே 13-ஆம் தேதிக்கு பின் படிப் படியாக குறையும் என்று கணித்து கூறியுள்ளார்.