
ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல், 2 பேர் கைது - அசாம் மாநில காவல்துறை அதிரடி.!
லாரியில் வைத்து கடத்தி வரப்பட்ட 100 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அசாம் மாநில காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்தியாவில் போதைப்பொருள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்திய எல்லைப்பகுதிகள் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைக்கவே, காவல் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். பல இடங்களில் அதிரடி சோதனையும் நடந்தது. அசாம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் லாரி நிறுத்தப்பட்டது.
லாரியில் அதிகாரிகள் சோதனையிடுகையில் பேரதிர்ச்சி நிகழ்வாக ரூ.100 கோடி அளவில் போதைப்பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, லாரியில் இருந்த 2 பேரை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பலிடம் இருந்து 4.6 இலட்சம் YABA போதை மாத்திரைகள், 12 கிலோ Ice Crystal போதைப்பொருள், 1.5 கிலோ ஹெராயின் பவுடர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 2 பேரும் அசாமில் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement