பதவியேற்ற முன்றாவது தினமே அமித்ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

Aravind kejirival meet amithsha


Aravind kejirival meet amithsha

டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்

இந்தநிலையில், டெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். 

உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் டெல்லி மமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சந்திப்பின் போது  போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.