கலிகால கொடுமை.. கள்ளகாதலியுடன் வாழ காதல் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை செலுத்திய கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

கலிகால கொடுமை.. கள்ளகாதலியுடன் வாழ காதல் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை செலுத்திய கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!



Andra Pradesh Gundur Man Inject Aids to Wife When He Takes Decision Live with Affair Girl

தனக்கு இடையில் கிடைத்த கள்ளகாதலியோடு வாழ நினைத்த கணவன், காதலித்து போராடி கரம்பிடித்து மனைவிக்கு எய்ட்ஸ் நோயை செலுத்திய பயங்கரம் நடந்துள்ளது. காதல் கணவனே உலகம் என இருந்த பெண்ணுக்கு கணவனால் செய்யப்பட்ட பெருங்கொடுமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர், தாடேபள்ளியில் வசித்து வருபவர் சரண் (வயது 35). இவரின் மனைவி மாதவி (வயது 32). தம்பதிகள் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2015ல் இருதரப்பு சம்மதத்தோடு திருமணமும் செய்துகொண்டனர். தற்போது இருவருக்கும் 5 வயதுடைய குழந்தை இருக்கிறது. 

இந்நிலையில், விசாகபட்டினத்தை சேர்ந்த பெண்ணோடு சரணுக்கு ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் காதல் மனைவியை மறந்துபோன சரண், கள்ளக்காதலியை மனைவியக்க முடிவு செய்துள்ளார். 

இந்த விசயத்திற்கு மாதவி இடையூறாக இருப்பார் என்பதை அறிந்துகொண்ட சரண், மனைவியின் உடல்நலத்தை பாதிக்க முடிவெடுத்து இருக்கிறார். அவரின் திட்டப்படி மனைவியிடம், நமக்கோ பெண் பிள்ளையே இருக்கிறார். எனது தம்பிக்கு ஆண் குழந்தை இருக்கின்றனர். 

Andra Pradesh

நாம் இறந்தால் நமது மகனே நமக்கு கொள்ளிவைக்க வேண்டும். அதனால் ஆண் குழந்தை வேண்டும். மங்களகிரியில் உள்ள மருத்துவரிடம் சத்து மருந்து செலுத்தினால் ஆண் குழந்தை பிறக்கும் என நயவஞ்சகத்துடன் பேசி அழைத்து சென்றுள்ளார். அங்கு ஊசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

மருத்துவரிடம் ஊசி செலுத்தி வந்த மாதவி தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்படவே, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது எச்ஐவி இருப்பது உறுதியானது. இதனையடுத்து, கணவரின் செயல்பாடுகளை கண்டபோது உண்மை அனைத்தும் அம்பலமாகியுள்ளது. 

காதல் கணவனின் துரோகத்தை அறிந்த மனைவி, தாடேபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்குகிறார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து சரணை கைது செய்தனர். சரணுக்கு உடந்தையாக செயல்பட்ட மருத்துவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.