கழுதை இறைச்சியால் ஆண்மை அதிகரிப்பா?.. புரளியால் பகீர்., 400 கிலோ பறிமுதல்..! ஆந்திராவில் பேரதிர்ச்சி.!!

கழுதை இறைச்சியால் ஆண்மை அதிகரிப்பா?.. புரளியால் பகீர்., 400 கிலோ பறிமுதல்..! ஆந்திராவில் பேரதிர்ச்சி.!!


Andra Pradesh Donkey meat Seized

உடல் வலிமை கிடைக்கும் என கழுதையை இறைச்சிக்காக கொலை செய்த நிலையில், 400 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாபட்டிலா மாவட்டத்தில் சட்ட விரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பீட்டா அமைப்பினர் நிகழ்விடத்தில் சோதனை செய்ததில், கழுதை இறைச்சி விற்பனை செய்தது உறுதியானது. 

Andra Pradesh

பின்னர், இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில், கழுதை இறைச்சி விற்பனை செய்தது உறுதியானதால், 400 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், கழுதை இறைச்சியை சாப்பிட்டால் உடல் வலிமை, ஆண்மை வீரியம் போன்றவை கிடைக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் கழுதைகளை இறைச்சிக்காக கொன்றதும் அம்பலமானது.