பிறந்ததில் இருந்து 16 ஆண்டுகளாய் எலும்புக்கூடாக தோற்றமளிக்கும் சிறுமி... கண்ணீருடன் வேதனையில் தவிக்கும் பெற்றோர்.!

பிறந்ததில் இருந்து 16 ஆண்டுகளாய் எலும்புக்கூடாக தோற்றமளிக்கும் சிறுமி... கண்ணீருடன் வேதனையில் தவிக்கும் பெற்றோர்.!


Andra Pradesh Child Parents Want Help

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் கோட்டூர், லிங்காரெட்டி பாலம் கிராமத்தில் வசித்து வருபவர் வேங்கடசுப்பா ராவ். இவரின் மனைவி சுஜாதா. தம்பதிகளுக்கு அலெக்யா என்ற 16 வயது மகள் இருக்கிறார். 

சிறுமி பிறந்ததில் இருந்து உடல் வளர்ச்சியின்றி எலும்புக்கூடாக இருந்துள்ளார். அவரின் தாய் - தந்தை கூலித்தொழிலாளிகள் என்பதால், சம்பாதிக்கும் பணத்தை மகளுக்கு மருத்துவ செலவுக்கு செலவழித்து வருகின்றனர். 

Andra Pradesh

தங்களது பிள்ளையின் விசித்திரமான நோய் காரணமாக திகைத்து நிற்கும் பெற்றோர், மருத்துவ உதவிக்காக நேற்று மச்சிலிப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.