தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கணவனுக்கு காதலியை கரம்பிடித்து கொடுத்த 40 நாட்களில் சக்களத்தி சண்டை; தலைமறைவான கணவன்.!
மனைவியின் சம்மதத்துடன் முன்னாள் காதலியை கரம்பிடித்த இளைஞர், திருமணமான 40 நாட்களுக்குள் மனைவிமார்கள் செய்த அக்கப்போரினால் தலைமறைவான சோகம் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் கல்யாண். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த செப். மாதம் நித்யா என்ற பெண்மணி விமலாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தனது முதல் காதல் குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது, இன்ஸ்டா செயலியில் ரீல் செய்து கல்யாணுக்கும், நித்ய ஸ்ரீ என்ற பின்னுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.
இவர்களின் காதல் பின்னாளில் கைகூடாமல் போன நிலையில், கல்யாணுக்கு விமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்பது தெரியவந்தது. நாங்கள் இருவரும் முன்னாள் காதலர்கள் என்பதால், எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என கண்ணீருடன் விமலாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தாரும் பேசி முடித்து விமலா தனது கணவர் கல்யாணை நித்ய ஸ்ரீயுடன் இரண்டாம் திருமணம் செய்ய சம்மதம் வழங்கியுள்ளார். கடந்த செப் 24ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்கிடையே திருமணம் ஆகி முழுவதுமாக 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில், சண்டையில்லாமல் இருப்போம் என்று சத்தியம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர்கள் சக்காளத்தி சண்டையில் ஈடுபட்டதால் கல்யாண் தலைமறைவாகியுள்ளார்.