வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. மனைவி உயிர் ஊசல்.. கண்ணீர் சோகம்.!



andhra pradesh electric scooter fire accident

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா நகரில் 40 வயதுடைய மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று தனது எலக்ட்ரிக் பைக்கில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். தொடர்ந்து திடீரென எதிர்பாராத விதமாக அதிகாலை நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்துள்ளது.

இதில் அந்த நபர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்து அவருடைய மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில், இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.Andhra Pradeshஅத்துடன் அவரது 2 குழந்தைகளும் இந்த விபத்தின் காரணமாக மூச்சுத்திணறலால், பாதிக்கப்பட்டதாகவும் தற்போது அவர்களது நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெலுங்கானாவில் இதே போன்று ஒரு எலக்ட்ரிக் வாகன பேட்டரி வெடித்து 80 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் எலக்ட்ரிக் பைக் பேட்டரியால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.