கொரோனாவில் இருந்து குணமானாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா..? உள்துறை அமைச்சகம் விளக்கம்..! ட்வீட் பதிவை நீக்கினார் பாஜக எம்.பி..!

கொரோனாவில் இருந்து குணமானாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா..? உள்துறை அமைச்சகம் விளக்கம்..! ட்வீட் பதிவை நீக்கினார் பாஜக எம்.பி..!


Amith shah corona test controversy news update

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருப்பதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி கூறியிருந்தநிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை மேகொண்டதாகவும், பரிசோதனையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில் பாஜக எம்.பி மனோஜ் திவாரி இன்று மதியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சிகிச்சைக்கு பிறகு அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நெகட்டிங் என வந்துள்ளதாக கூறியிருந்தார்.

corona

இந்த தகவல் இணையதளங்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என நாடு முழுவதும் வைரலானது. அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக பாஜக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக  ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்.

இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் அவருக்கு கொரோனா சரியாகிவிட்டதா இல்லையா என்பது தெரியவரும்.