அரசியல் Corono+

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா!

Summary:

amit shah recovered from corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் பாதிப்பு உறுதியானது.  கடந்த ஒரு வாரம் வரை அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.


மத்திய மந்திரி அமித்ஷா மத்திய அமைச்சரவையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் உறுப்பினர் ஆவார்.  எனினும், தொடர்ந்து தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 5ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி நடந்த பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியானது.  இதுபற்றிய தகவலை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு உள்ளார். மேலும், அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்த செய்தி பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement