அரசியல் இந்தியா

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Summary:

amit shah again admitted in hospital

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

மேலும் லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement