இந்தியா

பைப்பை திறந்தபோது தண்ணீருக்கு பதிலாக வந்த சரக்கு.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Summary:

Alcohol mixed in water in kerala

கேரளாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீருக்கு பதில் மது வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியை என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜோசி. இவர் தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்புவதற்காக மோட்டாரை ஆன் செய்துள்ளார்.

மோட்டார் ஆன் செய்து சிறிது நேரத்தில் குடியிருப்பு வாசிகள் நீரில் மது வாடை வருவதாக ஜோஷியிடம் புகார் கூறியுள்ளனர். கிணற்று தண்ணீரில் எப்படி மது என அனைவரும் குழப்பமடைந்த நிலையில் கிணற்றில் இருந்த நீரை சோதனை செய்ததில் அந்த நீரிலும் மது வாடை வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரித்ததில் ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது, குறிப்பிட்ட குடியிருப்பு அருகே 6 வருடங்களுக்கு முன் ஒரு பார் சட்டவிரோதமாக இயங்கிவந்துள்ளது. இதனை கண்டுபிடித்த கலால் துறை அதிகாரிகள் அந்த பாருக்கு சீல் வைத்தனர். மேலும், கைப்பற்றப்பட்ட 6000 லிட்டர் மதுவை, குழி தோண்டி ஊற்றியுள்ளனர்.

அவர்கள் தோண்டிய குழி அடுக்கு மாடி குடியிருப்பின் கிணற்றுக்குள் அருகில் இருந்துள்ளது. இதனை கவனிக்காத அதிகாரிகள் மதுவை அந்த குழியில் ஊற்ற, 6 வருடம் கழித்து அந்த மது கிணற்று நீருடன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement