தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ ரிலீஸ்?… நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த முக்கிய தகவல்!
நாய் கடித்ததால்... நாயை கொன்று ஏரியில் வீச சென்ற பெண்.... பரிதாப பலி..!!
குழந்தையையும், தன்னையும் நாய் கடித்ததால், நாயை கொன்று ஏரியில் வீச சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ நகரை சேர்ந்தவர் ரூபி. இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரையும் அவரது குழந்தையையும் நாய் கடித்து விட்டது. இதனால் அவரது வளர்ப்பு நாயை கொலை செய்து, அதை ஏரியில் வீசுவதற்காக கொண்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், ரூபியின் கணவர் ஏரி பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். ஏரி கரையில் ரூபியின் காலணிகள் கிடந்துள்ளன. இதையடுத்து உள்ளூர்வாசிகளின் சேர்ந்து நீரில் மூழ்கிய ரூபியை மீட்டுள்ளனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து கிழக்கு மண்டல ஏ.டி.சி.பி. சையது அலி அப்பாஸ், தீவிர விசாரணை நடத்தி வருகிறார். உடலை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை வெளியானதும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.