இந்தியா உலகம்

வீடியோ: ஆப்கானிஸ்தானில் நடுவானில் இருந்து கீழே விழும் 3 பேரின் வீடியோ காட்சி!! வைரல் வீடியோ இதோ!!

Summary:

ஆப்கானிஸ்தானில் பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து 3 பேர் பலியான வீடியோ காட்சிகள் இணையத

ஆப்கானிஸ்தானில் பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து 3 பேர் பலியான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், பலர் தங்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். இதனால் அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள விமானநிலையத்தில் நேற்று கூட்டம் மோதியது.

மேலும் அரசு பேருந்தில் ஏறுவதுபோல் அந்நாட்டு மக்கள் முண்டியடித்துக்கொண்டு விமானத்தில் ஏறுவதும், ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தை நோக்கி மக்கள் கூட்டமாக ஓடுவதும் போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்தது.

இந்நிலையில் அமெரிக்கா செல்ல தயரான ஒரு விமானத்தை விமானி இயக்கியபோது சிலர் விமானத்தின் டயரை பிடித்து தொங்கியபடியே பயணித்தனர். விமான நிலையத்துக்கு சற்று மேலே உயரமாக அந்த விமானம் பறக்க தொடங்கிய போது, தொங்கிய நிலையில் பயணித்த 3 பேர் பல்லாயிரக்கணக்கானோர் கண் முன்னாலேயே கீழே விழுந்து மாண்டு போயினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.


Advertisement