BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அந்த வயதில் செய்திருக்க கூடாது.! வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.! மனம் வருந்திய நடிகை ரேவதி!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேவதி. தனது முதல் படத்திலிருந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் அவர் தொடர்ந்து ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகை ரேவதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆங்கிலம் என பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை ரேவதி, சினிமா வாழ்க்கையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய வருத்தம் உள்ளது. நான் சரியான வயதில் திருமணம் செய்துகொள்ளாதது எனது பெரிய வருத்தம், நான் திருமணம் செய்த வயதில் செய்திருக்கக் கூடாது. 4 வருடங்கள் கழித்து செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரமாண்டமாக நடிகர் கிங்காங் வீட்டில் நடைபெற்ற விசேஷம்.! நேரில் சென்று வாழ்த்திய தமிழக முதல்வர்!!
இதையும் படிங்க: திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!