புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! பாஜக செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு பாஜக கட்சியினர் பலரும் அன்னதானம் வழங்குதல், சுகாதாரப்பணிகளை மேற்கொள்வது, மரம் நடுவது என நாடு முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்திய பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசிதரூர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தமிழக பா.ஜ.க.மீனவர் அணி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை நமீதா கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில்தான் நமீதா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். அதனை தொடர்ந்து வகைவகையான 370 கிலோ மீன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்பொழுது மக்கள் அனைவரும் நமீதாவுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்