பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
காரில் பயணித்த முன்னாள் கேரள அழகிகள்.! திடீரென ஏற்பட்ட விபத்து.! அப்பளம்போல் நொறுங்கிய கார்.! பரிதாபமாக போன உயிர்.!
சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர். இதே அழகி போட்டியில் இரண்டாவது இடம்பிடித்த அஞ்சனா ஷாஜன். இவர்கள் இருவரும் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் காரில் சென்றுள்ளனர். அப்போது இவர்களின் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது இவர்களது கார் மோதாமல் இருப்பதற்காக காரை சட்டென்று திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டை இழந்த அவர்களது கார் சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக கார் மோதியது. இந்த விபத்தில் அவர்களது கார் அப்பளம்போல் நொறுங்கி அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்கள் பயணித்த காரில் மொத்தம் நான்கு பேர் பயணித்துள்ளனர். இருவர் உயிரிழந்த நிலையில், இரண்டுபேர் பலத்த காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.