கல்லூரி விடுதியின் 2- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்.‌.. ராகிங்கால் நேர்ந்த விபரீதம்...!!

கல்லூரி விடுதியின் 2- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்.‌.. ராகிங்கால் நேர்ந்த விபரீதம்...!!


A student attempted suicide by jumping from the 2nd floor of the college hostel

ராகிங் தொல்லையால் மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அசாமில் உள்ள திப்ரூகார் மாவட்டத்தில் இருக்கும் திப்ரூகார் பல்கலை கழகத்தின் விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியின் இரணடாவது மாடியில் தங்கியிருந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

மாடியில் இருந்து கீழே குதித்த  மாணவர் ஆனந் சர்மாவை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இதுகுறித்து ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், ஐந்து பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதவிர, மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்  ஆனந்த் சர்மா சிகிச்சைக்கு பிறகு தேறி வருகிறார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.