18 ஆண்டுகளுக்கு முன் மாயமான அண்ணனை இன்ஸ்டாவில் கண்டெடுத்த தங்கை; மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.!a sister find his brother through Instagram after he was missing 18 years 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியை சேர்ந்த பெண்மணி ராஜகுமாரி. இவருக்கு பால் கோவிந்த் என்ற அண்ணன் இருந்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இரயில் பயணத்தின்போது பால் கோவிந்த் காணாமல் போயுள்ளார். 

அவரை பல இடங்களில் பெற்றோர்-உறவினர்கள் தேடியும் பலன் இல்லை. இறுதியாக மாயமான தனது மகன் எங்கோ உயிருடன் இருப்பார் என பெற்றோர் வாழ்ந்து வந்தனர். 

இதையும் படிங்க: தம் அடித்து தௌலத்தாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுமி; பெல்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்த தந்தை...!

சொந்தத்துடன் இணைந்த நபர்

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டிருந்த ராஜகுமாரி, சமீபத்தில் தனது அண்ணன் உருவத்தை ஓத்த நபரின் பதிவுகளை பார்த்துள்ளார். அந்த பதிவின் வாயிலாக, தனது அண்ணனின் தோற்றத்தை கண்டறிந்துள்ளார். 

இதனையடுத்து, அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை நிர்வகித்த நபருக்கு தொடர்பு கொண்ட பெண்மணி, நடந்த விபரங்களை கூறி இருக்கிறார். இதனையடுத்து, விட்டுப்போன சொந்தம் ஒன்றை கண்டெடுத்த பால் கோவிந்த், அவர்களுடன் இணைந்தார்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் ஜோடிக்கு சவுக்கடி தண்டனை; நடுரோட்டில் கதறிய இளம்பெண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்.!