ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்... கொடூர சம்பவம்...!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்... கொடூர சம்பவம்...!A mysterious person poured petrol on the passengers and set them on fire in a moving train...

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் பயணி ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

தீயை பார்த்ததும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண், ஒரு ஆண் என்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா(2), ரஹ்மத், சௌபிக் என மூன்று பேர் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

ரயிலில் தீவைத்து எரித்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோழிக்கோடு அருகே ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயில் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.