மிகப்பெரிய விபத்திலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய நபர்... என் மனைவியும் இருந்திருக்கக் கூடாதா.? கண்ணீர் மல்க பேட்டி!

மிகப்பெரிய விபத்திலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய நபர்... என் மனைவியும் இருந்திருக்கக் கூடாதா.? கண்ணீர் மல்க பேட்டி!



a-man-from-odissha-who-made-a-narrow-escape-from-the-co

கொல்கத்தாவின் ஹவுரா ஜங்ஷனிலிருந்து  சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்  ஒடிசா மாநிலத்தின் பால்சோர் என்ற இடத்தில் வைத்து சரக்கு ரயில் மற்றும்  பெங்களூரிலிருந்து கொல்கத்தா சென்ற ரயில் ஆகியவற்றுடன் மோதி தடம் புரண்டதில் 300-க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி கொள்ளாக்கியது.

இந்தக் கோர விபத்தில் இருந்து ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் நூல் நிலையில் உயிர்தப்பிய சம்பவம்  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் பால்சோர்  பகுதியைச் சார்ந்தவர் கௌதம் தாஸ். இவரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து நடந்த தினத்தன்று பயணம் செய்வதாக இருந்திருக்கிறது.

coramandelexpress

ஆனால் பணிச்சுமையின் காரணமாக இவரால் ரயிலை பிடிக்க முடியவில்லை. இதனால் நூலிலையில் உயிர் பிழைத்து இருக்கிறார் அந்த நபர். ஆனாலும் இவரது மனைவி  மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் அந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

என்னுடைய பணியின் காரணமாக அந்த ரயிலை பிடிக்க முடியாததால் நான் தப்பித்தேன். ஆனாலும் என்னுடைய மனைவி அந்த விபத்தில் இறந்து விட்டார். அவரும் அந்த ரயிலை விட்டு இருக்கக் கூடாதா என கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார் கௌதம் தாஸ். ரயில்வே துறையின் அஜாக்கிரதை காரணமாக ஏராளமான மக்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.