இந்தியா

#வீடியோ: பிரசவ வலியால் துடித்த பெண்.. BMW காரில் வந்த சிறுமி, தெய்வமாக காட்சி தந்த நெகிழ்ச்சி.!

Summary:

#வீடியோ: பிரசவ வலியால் துடித்த பெண்.. BMW காரில் வந்த சிறுமி, தெய்வமாக காட்சி தந்த நெகிழ்ச்சி.!

சிறு குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள், நாம் நன்மை செய்தால், அதே நன்மை நமக்கு தேவைப்படும் போது பெரும் உதவியாக கிடைக்கும் என்று நமது முன்னோர்கள் நம்மிடையே சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். 

அது பல இடங்களில் இக்கலியுகத்தில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "ஆட்டோவில் கர்ப்பிணி பெண்ணொருவர் பயணம் செய்து வந்துள்ளார். இந்த ஆட்டோவின் டயர் திடீரென பழுதாகியுள்ளது. ஆட்டோவில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் துடித்துக்கொண்டு இருக்க, ஆட்டோ ஓட்டுநர் விரைந்து டயரை மாற்ற முயற்சி செய்கிறார். அதற்குள்ளாக பெண் வலிபொறுக்க இயலாமல் கதறி அழுகிறார். 

இதனால் ஆட்டோ ஓட்டுநர் பெண்ணை மாற்று வாகனத்தில் அனுப்ப திட்டமிட்டு, சாலையின் வழியே வரும் பல வாகனத்திடம் உதவி கேட்கிறார். அப்போது, விலையுர்ந்த சொகுசு கார் ஒன்று அவ்வழியாக செல்கிறது. முதலில் அந்த கார் விரைந்து சென்றாலும், பின்னர் பின்னோக்கி பயணித்து வருகிறது. காரில் இருந்து இறங்கிய சிறுமி, ஆட்டோவிற்கு அருகே சென்று பார்க்கையில் பெண்மணி வலியால் அழுவதை காணுகிறார். 

அவரிடம் பேசிய சிறுமி, தனது காரில் இருந்து வாட்டர் கேனை எடுத்து தண்ணீரை கொடுக்கிறார். பெண்மணி அதனை வாங்கி குடிக்க முடியாமல் திணறி அழவே, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அழுகிறார். பின்னர், காரில் உள்ள தந்தையிடம் விஷயத்தை தெரிவிக்கவே, காரில் இருந்து இறங்கிய சிறுமியின் தந்தை, பெண்மணியை பார்த்துவிட்டு சற்றும் யோசனை செய்யாமல், பெண்மணியை அப்படியே தூக்கி தனது காரில் ஏற்றி புறப்படுகிறார். 

அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர், காரில் வந்தவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்து, தனது வாகனத்தை சரி செய்து வருகிறார். இதுவுடன் விடியோவும் நிறைவு பெறுகிறது". நாம் நல்லது செய்தால், கடவுள் நமக்கு தேவையான உதவியை பி.எம்.டபிள்யூ காரில் அனுப்பி வைப்பார் என்பது இதுதான் போல. காரில் பயணிக்கும் போது வெளியே கவனித்து காரை பின்னோக்கி அழைத்து வந்த சிறுமியை கடவுளாக காட்சி தருகிறார் இங்கு.

நல்லது செய் நல்லதே நடக்கும். 


Advertisement