9 மணிநேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு!!

9 மணிநேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு!!


a-4-year-old-child-who-fell-into-a-borehole-was-rescued

பீகார் மாநிலத்தில் உள்ள குல் கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் அவரது நான்கு வயது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை விளையாட விட்டு, அப்பெண் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

குழந்தை 60 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை கண்டறிந்தவர்கள் குழு, 9 மணி நேரம் போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டனர். பின் குழந்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.