இந்தியா

பதறவைக்கும் வீடியோ காட்சி.! செல்போனை பறித்த திருடனுடன் நடு ரோட்டில் சண்டையிட்டு போராடிய சிறுமி.!

Summary:

A 15-year-old girl fought off snatchers who tried to snatch her mobile phone

தனது ல்போனை பறித்து சென்ற திருடர்களிடம் போராடி 15 வயது சிறுமி ஒருவர் தனது செல்போனை மீட்டதுடன், திருடர்களில் ஒருவனை பிடித்து பொதுமக்களிடம் ஒப்படைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர்-கபுர்தலா பகுதியில் குசும் குமாரி என்ற 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமியின் செல்போனை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் மிகவும் துணிச்சலாக செயல்பட்ட அந்த சிறுமி இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த திருடன் ஒருவனின் சட்டையை பிடித்து கீழே இழுத்து அவனுடன் சண்டையிடுகிறார். மேலும் திருடன் தனது கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் சிறுமியை தாக்கிய போதும் அந்த சிறுமி விடாமல் அந்த திருடனுடன் சண்டையிடுகிறார். 

இதனிடையே சிறிது நேரத்தில் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடிச் சென்று சிறுமியை திருடனிடம் இருந்து மீட்டனர். பொதுமக்கள் வருவதை பார்த்த  பைக்கில் அமர்ந்து திருடன் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் மற்றொருவனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

கையில் கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கிய போதும் மிகவும் தைரியமாக செயல்பட்டு தனது செல்போனை மீட்டதுடன், திருடனை போலீசில் சிக்க வைத்த அந்த சிறுமியின் செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். சிறுமி அந்த திருடனுடன் போராடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement