இந்தியா

ஒரே கிணற்றில் மிதந்த 9 வெளிமாநில தொழிலார்களின் சடலங்கள்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்..! பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

9 bodies found in Telngana well mysterious dead

தெலுங்கானாவில் விவசாய கிணறு ஒன்றில் இருந்து 9 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கள் மாவட்டத்தில் உள்ள சணல் தொழிற்சாலை ஒன்றில் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலார்கள் அதிகம் வேலைபார்த்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் தொழிலார்கள் அனைவரும் அதே பகுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையியல் அங்குள்ள கிணறு ஒன்றில் இருந்து 9 வட மாநில தொழிலார்களின் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 9 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

image

இறந்தவர்களின் உடல்களில் காயங்கள் இல்லை என்பதால் அனைவரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருப்பினும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒன்றாக இறந்திருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் அணிஅவரும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement