இந்தியா

என் அக்காவை உடனே கைது பண்ணுங்க! 8 வயது சிறுவனின் விசித்திர புகார்! அதிர்ச்சியில் போலிசார்!

Summary:

8 year boy complaint on sister

கேரளா கோழிக்கோடு பெரியபாலம் பகுதியில் வசித்து வந்தவர் உமர் நிதர். எட்டு வயது நிறைந்த அவர் தனது வீட்டிற்கு அருகே மிகவும் ஆக்ரோஷத்துடன் விசாரணை ஒன்றிற்காக வந்த காவல் அதிகாரிகளிடம் விசித்திரமான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மனுவில், நான் உமர் நிதர். இன்டர்நேஷனல் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது சகோதரி அவரது தோழிகள் 5 சிறுமிகள் என்னை விளையாட்டில் சேர்த்துக்  கொள்வதில்லை. விரட்டி விடுகின்றனர். மேலும் நான் பையன் என்பதால் அடிக்கடி கேலி செய்து சிரிக்கின்றனர். அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

இதனை கண்டு ஊரடங்கால் சிறுவன் விளையாட முடியாமல் மன உளைச்சலில் இருக்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்ட போலீசார் அவரது மனுவை அலட்சியம் செய்யாமல், அந்த சிறுவனின் குடியிருப்பு பகுதிக்கு சென்று அவரது சகோதரி மற்றும் தோழிகளை அழைத்து உமர் நிதரை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். 


Advertisement