இந்தியா

வீட்டில் தனியாக இருந்த 8 மாத கர்ப்பிணி! கதவை திறந்து உள்ளே சென்ற குடும்பத்தார் கண்ட அதிர்ச்சி காட்சி!

Summary:

8 month pregnant lady murdered by brother in law

பெங்களூரில் வசித்து வந்தவர் ஜோதி.இவர் திருமணமான நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த அவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் வீட்டின் சுவற்றிலும் ரத்தங்கள் படிந்திருந்தது.இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தார்கள் இதனை கண்டு அதிர்ச்சியில் கதறி துடித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தெரிய வந்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது ஜோதிக்கும், அவரது கணவரின் தம்பி ஹரிபாபு என்பவருக்கும் பல நாட்களாகவே பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹரியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் தான்தான் அண்ணியை கத்தியால் குத்தி கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

Fact Check: Can Dead Bodies Of COVID-19 Patients Transmit Novel ...

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஹரி தினமும் வீட்டில் இருப்பவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளார் இதனால் அவரது மனைவியும் கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்தான் அவர் நேற்று அண்ணி ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஹரி அண்ணியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement