இந்தியா உலகம்

குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்ற இந்தியர்கள் 8 பேர் பரிதாப பலி! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

8 indians died in nepal

நேபாள நாட்டிற்கு பல்வேறு நாட்டை சார்ந்தவர்களும் சுற்றுலாவிற்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு நேபாள நாட்டிற்கு சென்ற, இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்ந்த 8 பேர் எரிவாயு கசிவின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவிற்காக சென்றிருந்தனர். இவர்கள் அங்குள்ள மகாவான்பூர் மாவட்டத்தில் இருக்கும் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் எவரெஸ்ட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். 

இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு, ஜன்னல்கள் என அனைத்தையும் இறுக்கமாக மூடி வைத்துள்ளனர். பின்னர் குளிர் காய்வதற்காக எரிவாயு ஹீட்டர்-ஐ பயன்படுத்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு போதிய காற்றோட்ட வசதி இல்லாத சூழல் ஏற்பட்டு எரிவாயு நெடியில் சிக்கி 8 பேரும் உயிரிழந்ததாக விடுதி மேலாளர் கூறியுள்ளார்.


Advertisement