74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பாட்டி! குவியும் வாழ்த்துக்கள்! எங்கு தெரியுமா?



74 years old woman delivers twins in Andhra Pradesh

இந்த உலகின் ஏதவது ஒரு இடத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நமது நாட்டில் அதுவும் ஆந்திராவில் 74 வயது பாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துல சம்பவம் அனைவரும் ஆச்சரியப்பட்டவைத்துள்ளது.

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெல்லபார்திபடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(80). இவரின் மனைவி இராமட்டி மங்கையம்மா(74). இந்த தம்பதியர் 1962ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து பல வருடங்கள் கழித்தும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

Mystery

இதனால் பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் இவர்களுக்கு பலம் கிடைக்கவில்லை. மேலும், குழந்தை இல்லை என்ற காரணத்தினால் இவர்களது கிராமத்தில் இவர்கள் பல்வேறு இழிசொற்களுக்கும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில்தான் கடந்த வருடம் குண்டூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையை அணுகியுள்ளனர்.

மங்கையம்மாவை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை போன்ற வியாதிகள் இல்லாததாலும் இவரது மரபணுக்கள் குழந்தைபெற தகுதியுடையவையாக இருந்ததாலும் இன் விட்ரோ கருத்தரித்தல் முறையில் மருத்துவர்கள் மங்கையம்மாவை கருத்தரிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மங்கையம்மாவுக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதன்மூலம் அதிக வயதில் குழந்தைப்பேற்றை பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மங்கையம்மா.

Mystery