இந்தியா

பனிச்சரிவில் மாயமான இந்திய இராணுவ வீரர்கள்.! அனைவரும் சடலமாக மீட்பு.!

Summary:

பனிச்சரிவில் மாயமான இந்திய இராணுவ வீரர்கள்.! அனைவரும் சடலமாக மீட்பு.!

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 7 ராணுவ வீரர்கள் மாயமாகினர். 

இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஹெலிகாப்டர் மூலம் சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டு, தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக 7 பேரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது 7 வீரர்களின் உடல்களும் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் உள்ள இராணுவ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. 


Advertisement