குஜராத்தில் பட்டம் விடும் திருவிழாவில் கழுத்தில் கயிறு சிக்கி 6 பேர் பலி.. 146 பேர் படுகாயம்..!

குஜராத்தில் பட்டம் விடும் திருவிழாவில் கழுத்தில் கயிறு சிக்கி 6 பேர் பலி.. 146 பேர் படுகாயம்..!


6 members dead in Gujarat

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழாவானது ஜனவரி மாதத்தில் பெரும் திருவிழா போல கொண்டாடப்படும். அங்குள்ள அகமதாபாத், வதோதரா உட்பட பல நகரங்களில் அன்றைய நாட்களில் எங்கு திரும்பினாலும் பட்டமாக வானில் தென்படும். 

இந்த பண்டிகையின் போது பட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூலில் சிலர் நைலான் கயிறுகளை உபயோகம் செய்து வருகின்றனர். இது உள்ளூரில் நடைபெறும் போட்டாபோட்டி காரணமாக பட்டத்தை அறுக்கவும், அவர்களின் வெற்றிக்காகவும் மறைமுகமாக உபயோகம் செய்யப்படுகிறது. 

இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்கிறது. இந்த நிலையில், தற்போது வரை குஜராத்தில் பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பச்சிளம் குழந்தைகளும் இருக்கிறார்கள். அதுதவிர 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.