இந்தியா Covid-19

ஒரே மருத்துவமனையில் வேலைபார்த்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று.! அதிர்ச்சி கிளப்பும் மஹாராஷ்டிரா மருத்துவமனை.

Summary:

40 Kerala nurses working at Mumbai hospital test positive for COVID-19

மஹாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துவந்த கேரளாவை சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை தடுக்க அணைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவிலும் கொரோனவை தடுக்க 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொன்று அதிகமாக இருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மொத்தம் 51 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் மூலம் மருத்துவமனை செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.


Advertisement