பார்க்கும் போதே கண்கலங்குது!! இந்த குழந்தைக்கு இப்படி ஒரு துயரம்மா....!!

பார்க்கும் போதே கண்கலங்குது!! இந்த குழந்தைக்கு இப்படி ஒரு துயரம்மா....!!


22-days-child-missing

கங்கை ஆற்றில்  ஒரு மரப்பெட்டியில் 22 நாள் பெண்குழந்தை மிதந்து வந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உத்திரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கையாற்றில் ஒரு மரப்பெட்டி  ஒன்று  மிதந்து வந்துள்ளது. அப்பெட்டி தாத்ரி காட்  பகுதியில் ஒதுங்கி அந்தப் பெட்டியில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்டது. ஆற்றின் வழியே சென்ற ஒரு படகோட்டி மரப்பெட்டியில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அப்பெட்டியை நோக்கிச் சென்று படகோட்டி மரப்பெட்டியை திறந்து பார்த்தார். அதில் சிவப்பு நிற பட்டாடையுடன் இந்து தெய்வங்களின்  படங்களும், குழந்தையின் ஜாதகமும் இருந்துள்ளது. 

பின்னர்  படகோட்டி குழந்தையை மீட்டு காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மரப்பெட்டியில் உள்ள குழந்தை  22 நாள் பெண் குழந்தை  என்பதால் பகுழந்தையின் முழுப் பொறுப்பையும் உத்தரபிரதேச அரசு ஏற்றுக்கொள்வதாகவும், அதன் சரியான வளர்ப்பை உறுதி செய்வதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கங்கை ஆற்றில் மிதந்து வந்ததால் இக்குழந்தைக்கு  'கங்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.