60 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 20 வயது இளைஞன்! அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது எப்படி?

60 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 20 வயது இளைஞன்! அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது எப்படி?


20 years old boy married 60 years old women

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்த 60 வயது விதவை பெண் கேசவர்தினி என்பவர் வசித்து வந்துள்ளார்.  கேசவர்த்தினிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரோகேஷ் என்ற இளைஞர் தவறுதலாக போன் செய்துவிட்டார். ஆனாலும் ராங் நம்பர் என இருவருமே கூறிவிட்டு, இருவரும் மரியாதையாக பேசிக்கொண்டனர். இருவருக்குமே அவர்கள் பேசிக்கொண்ட விதம் பிடித்திக்கொண்டதால் இருவரும் முதல் தவறுதல் செல்போன் அழைப்பு மூலமாக நண்பர்கள் ஆனார்கள். 

இந்தநிலையில் ரோகேஷ் மற்றும் கேசவர்தினி இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் 20 வயது நிரம்பிய ரோகேஷ், 60 வயது நிரம்பிய கேசவர்த்தினிக்கு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். 

marriage

கேசவர்த்தினிக்கு, ரோகேஷை பிடித்ததால் அவரின் காதலை ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் ரோகேஷ், கேசவர்த்தினியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.  இந்தநிலையில் ரோகேஷ் இரண்டு தினங்களுக்கு முன் பலர் முன்னிலையில் 60 வயது நிரம்பிய கேசவர்த்தினிக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளார். 

20 வயது இளைஞர் 60 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதால். இந்த விஷயம் அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஆனாலும் பலரும் அவர்களது காதல் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.