2 அடி உயரமே உள்ள நபர்.. காவல் நிலையத்தில் வைத்த கோரிக்கையை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..

2 அடி உயரமே உள்ள நபர்.. காவல் நிலையத்தில் வைத்த கோரிக்கையை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..


2-Foot Tall Man Goes To UP Police Asks Them To Find Him A Bride

2 அடி உயரமுள்ள இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் போலீசாரிடம் வைத்த கோரிக்கை இணையத்தில் வைரலாகிவருகிறது.

இன்று திருமணம் என்பது பலருக்கு எட்டா கனியாக மாறிவருகிறது. இந்நிலையில் தனக்கு திருமணம் செய்ய பெண் தேடி தருமாறு 2 அடி உயரமுள்ள இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் போலீசாரிடம் உதவி கேட்ட சம்பவம் பெரும் வைரலாகிவருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்திலுள்ள கைரானா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அசீம் மன்சூரி. தற்போது 26 வயதாகும் இவர் 2 அடி மட்டுமே உயரம் கொண்டவர். இவருக்கு திருமணம் செய்துவைக்க இவரது குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் அசீமை பார்க்கும் பெண்கள், அவரது உயரத்தை காரணம் காட்டி அவரை திருமணம் செய்துகொள்ள மருத்துவருகின்றனர்.

Viral News

இதனால் மனவேதனை அடைந்த அசீம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். தனது உயரத்தை காரணம் காட்டி பெண்கள் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், இதனால் தனக்கு மணப்பெண்ணைத் தேடி திருமணம் செய்து வைத்து, பொது சேவை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் ஏற்கனவே இதுபோன்று முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து, தனது ஆசையை அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது காவல் நிலையம் சென்று உதவி கேட்டுள்ளார் அசீம். அவரது கோரிக்கையை கேட்ட போலீசார், திருமணத்தில் இரண்டு குடும்பத்தினருக்கு பிரச்சனை அல்லது மாப்பிளை - பெண்ணுக்கு இடையே பிரச்சனை என்றால் தங்களால் உதவ முடியுமே தவிர, இதுபோன்று பெண் பார்த்துத்தரும் வேலைகளை தங்களால் செய்ய இயலாது என அவருக்கு அறிவுரை வழங்கியதோடு, விரைவில் உங்களுக்கு பெண் கிடைக்கும் என ஆறுதலும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.