இந்தியா லைப் ஸ்டைல்

அடிச்சது லக்கு!! போட்டிபோடும் பெண்கள்..!! மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த உ.பி நபருக்கு குவியும் வரன்கள்!

Summary:

தனக்கு பெண் பார்த்துத்தருமாறு போலீசாரிடம் உதவி கேட்ட இளைஞருக்கு தற்போது இந்தியா முழுவதிலும

தனக்கு பெண் பார்த்துத்தருமாறு போலீசாரிடம் உதவி கேட்ட இளைஞருக்கு தற்போது இந்தியா முழுவதிலும் இருந்து வரன்கள் குவிய தொடங்கியுள்ளதாம்.

உத்தரபிரதேசத்தின் கைரானாவில் வசித்துவருபவர் 2 அடி உயரமுள்ள அசிம் மன்சூரி. தனது சகோதரனுடன் சேர்ந்து அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்துவரும் இவர், சமீபத்தில் நாடு முழுவதும் பிரபலமானார். ஆம், சமீபத்தில் அசிம் மன்சூரி ஷம்லி கோட்வாலி பெண்கள் காவல் நிலையத்தை அடைந்து, தனது திருமணத்திற்கு உதவுமாறும், தனக்கு பெண் பார்த்து கொடுக்குமாறும் இன்ஸ்பெக்டரைக் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து கூறிய அவர், தான் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், உயரம் மிக குறையாவாக இருப்பதால் தன்னை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை. தற்போது 25 வயதாகும் தனக்கு திருமணத்திற்கு பெண் வேண்டும் என கூறியிருந்தார்.

இளைஞரின் இந்த வினோத முயற்சி பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களில் வெளியாகி கடும் வைரலானது. தற்போது அதன் பயனாக இவரை திருமணம் செய்துகொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவருக்கு வரன்கள் குவிய தொடங்கியுள்ளதாம்.

இதுகுறித்து கூறியுள்ள அந்த இளைஞரின் குடும்பத்தினர், விரைவில் நல்ல ஒரு வரனை தேர்வு செய்து, தங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைக்க இருப்பதாக கூறியுள்ளனர்.


Advertisement