கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..



16 people cured from corona in thirupathi kovil aarsakar

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள், கோவில்கள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் அடங்கும்.

அதன்பிறகு ஏற்ப்பட்ட ஊரடங்கு தளர்வுக்கு பின் மீண்டும் திருப்பதி கோவில் திறக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிப்புரியும் 17 அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

corona

மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்பின் தரிசனத்திற்கான கவுன்டர்களில் விநியோகம் செய்யும் டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆன்லைனில் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 அர்ச்சகர்களில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.