14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை எதிரொலி; குஜராத்தில் 342 பேர் கைது

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை எதிரொலி; குஜராத்தில் 342 பேர் கைது


14-year-old-girl-raped-all-immigirants-attacked

14 வயது நிரம்பிய குஜராத் சிறுமியை அங்கு தொழிலாளராக பணிபுரிந்துவந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும் கலவரமும் ஏற்பட்டது ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலத் தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரிலிருந்து 116 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சபர்கந்தா. இப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து சபர்கந்தா, அகமதாபாத், பதான், மேசான ஆகிய பகுதிகளில் பெரும் பதற்றமும் கலவரமும் எழுந்துள்ளது.

வெளி மாநிலத்தவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து குஜராத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர்.

attacking other state workers in gujarat

இந்த தாக்குதல் சம்பவத்தால் குஜராத்தின் 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 342 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் தாக்கூர் சேனா என்ற அமைப்பினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தாக்கூர் இன காங்கிரஸ் எம்எல்ஏவான அல்பேஷ் தாக்கூர், யாரும் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்; தாக்கூர் இன மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.