"செல்போன் சார்ஜ் போட சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த சோக முடிவ..." அதிர்ச்சியில் பெற்றோர்!

"செல்போன் சார்ஜ் போட சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த சோக முடிவ..." அதிர்ச்சியில் பெற்றோர்!


12-year-old-uttarpradesh-girl-ded-in-an-electrich-shock

உத்திர பிரதேசம் மாநிலத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்ய முயன்ற 12 வயது சிறுமி  மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திர பிரதேசம் மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள சைத்பூர் பகுதியைச்  சேர்ந்தவர் மான்சி இவரது வயது 12. இவர் சனிக்கிழமை மாலை வணக்கம் போல் செல்போனிற்கு சார்ஜ் போடுவதற்காக  சென்று இருக்கிறார். அப்போது வயரில் இருந்த மின்சாரம் இவர் மீது பாய்ந்து உள்ளது . இதனால் சாகி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

UttarPradesh

இதனைக் கண்டு பதற்றமடைந்த அவரது பெற்றோர் உடனடியாக  அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனை வந்தனர்.

பின்னர் சிறுமியின் உடலை கைப்பற்றிய அவர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தார் இடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.