திடீரென ஏற்பட்ட சோகம்... ஆற்றில் கவிழ்ந்து விழுந்த பேருந்து... 12 பேர் உயிரிழப்பு... பல பேர் கவலைக்கிடம்!!

திடீரென ஏற்பட்ட சோகம்... ஆற்றில் கவிழ்ந்து விழுந்த பேருந்து... 12 பேர் உயிரிழப்பு... பல பேர் கவலைக்கிடம்!!


12 members died for bus accident in mathiya Pradesh

மத்திய பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றில் பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற கொண்டிருந்த பேருந்து ஒன்று தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து திடீரென நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

அந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.