10 கி.மீ கால் வலிக்க நடந்து சென்று தந்தை மீதுபுகார் கொடுத்த 11 வயது சிறுமி.. என்ன காரணம் தெரியுமா?



11-years-odisha-girl-walks-10-km-to-file-complaint-agai

10 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் தனது தந்தை மீது புகார் மனு அளித்துள்ளார் ஒடிசாவை சேர்ந்த 11 வயது சிறுமி.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவிற்கு பதிலாக அதற்கு ஆகும் செலவிற்கான பணத்தை அரசு மாணவர்களின் பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலம் கேந்திரா பாரா மாவட்டத்தில் உள்ள டுகுக்கா என்ற கிராமத்தை சேர்ந்த 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் அம்மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

சுமார் பத்து கிலோ மீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் வர்மாவிடம் அவர் வலனிய அந்த புகார் மனுவில், "மத்திய உணவிற்காக அரசு தரும் பணத்தை எனது தந்தை தரமறுப்பதாகவும், அவரிடம் இருந்து உடனே அந்த பணத்தை மீட்டு தரவேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார் அந்த சிறுமி.

குறிப்பிட்ட சிறுமியின் தாயார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டநிலையில் சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும், அவர்கள் சிறுமையை கவனிக்க மறுத்ததால் தற்போது அவர் உறவினர் ஒருவரின் வீட்டில் வளர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.