இந்தியா

பயணிகள் பயணித்த பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து! 10 பேர் பலி, 25 பேர் படுகாயம்!

Summary:

10 people died in bus, lorry accident


ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது லாரி மோதியதில்  10 பேர் உயிரிழப்பு. 5 க்கும் மேலானோர் படுகாயமடைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி, பேருந்தின் மீது  மோதியது. வேகமாக மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.  

இந்தூர் அதிகாலை நடந்த கோர விபத்தில் பேருந்துக்குள் பல பயணிகள் சிக்கி தவித்தனர். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் அங்கு நடந்த கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 25 க்கும் மேலானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த வாகனங்கள் சாலையில் கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Advertisement