இந்தியா Covid-19

கொரோனாவின் கோரதாண்டவம்! இந்தியாவில் 10 மற்றும் 7 மாத குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு..!

Summary:

10 month child affected by corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரசின் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா தனது வேலையை காட்டி கொத்து கொத்தாக மக்களை காவு வாங்கி வருகிறது. அதனை அடுத்து தற்போது இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை இந்நோயால் 700க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இந்தியாவில் இந்நோயால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 62 பேருக்கு பாதிப்பும் 3 உயிரிழப்பும் ஏற்பத்துள்ளது. இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவெனில் கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கோரோனோ வைரஸ் பாதித்துள்ளது. அந்த குழந்தை இதுவரை எந்த வெளிநாட்டிற்கும் சென்றது இல்லையாம்.

மேலும் ஜம்மு காஷ்மீரில் 7 மாத குழந்தை ஒன்றிற்கும் கோரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்கள் வரை குழந்தைகள் முதல் தாக்கக்கூடிய இந்த கொடிய வைரஸ்சிடம் இருந்து விடுபட வீட்டிற்குள் இருப்பதே சிறந்தது.


Advertisement