சிறுநீரை பல ஆண்டுகளாக குடித்து வரும் ஆசிரியை!. பரபரப்பு தகவல்கள்!.

சிறுநீரை பல ஆண்டுகளாக குடித்து வரும் ஆசிரியை!. பரபரப்பு தகவல்கள்!.


yoga teacher drinking her urine

நேவீங்கடினில் வசிக்கும்  யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ என்பவர் தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு 'யூரோஃபோபியா' சிறுநீர் சிகிச்சை என்று பெயர் என கூறியுள்ளார்.

சிறுநீரை குடித்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை  மீட்டெடுப்பதாகவும், ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு நன்மையளிக்கும் என்று நினைத்தேன்.

அதன் பிறகு, சிறுநீர் குடிக்க ஆரம்பித்த கெலீ ஓக்லீ, இப்போது தனது சிறுநீரில் நனைக்கப்பட்ட பருத்தித் துணியால் தனது முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் முகச் சருமம் 'பளபளப்பாக' இருப்பதாக நம்புகிறார்.

சிறுநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 46 வயது லீஹ் சாம்சன் கூறுகிறார். என் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து, உட்கொள்ளும் உணவில் இருந்து சோடியத்தை குறைக்க முடிவு செய்தேன். எனவே தினமும் காலையில் சிறுநீரை குடிக்கிறேன் என கூறுகிறார்.

ஆனால் இதற்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, மேலும் இவை கேடு விளைவிக்கும் என கூறியுள்ளனர் 

உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை மீண்டும் உடலுக்குள் அனுப்புவது சரியல்ல. பொதுவாக சிறுநீரகத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. 

அது உடலில் இருக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீர் நச்சாக மாறிவிடும். அதை மீண்டும் உடலில் ஏற்றிக் கொள்வது உடல்ரீதியிலான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.

யூரோஃபோபியாவால் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்தான் சிறுநீராக உடலில் இருந்து வெளியேறுகிறது. எனவே இதை யாரும் கடைபிடிக்கவேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.