சிறிய விதைகளால் பெரிய பலன்; ஆண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்

சிறிய விதைகளால் பெரிய பலன்; ஆண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்



to increase boys sperm count

திருமணம் ஆகிய தம்பதியர் அனைவர்க்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசை குழந்தை பெறவேண்டும் என்பதே.  ஆனால் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ ஏதேனும் குறைபாடு இருந்தால் அவர்களால் எளிதாக குழந்தை பெற இயலாது. இந்த பிரச்சினையால் இன்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு பல தீர்வுகளை தேடி நிம்மதியை இழந்தும் விடுகின்றனர்.  பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே நம் முன்னோர்கள் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மருந்துகளின் மகத்துவத்தை நமக்கு வழங்கி சென்றுள்ளனர். இன்று நாம் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றோம்.

குழந்தை பேறு என்பது மிகவும் அற்புதமான ஓன்று. பெண்களுக்கு எவ்வாறு சில வகையான குறைபாடுகள் இருக்கிறதே அதே போன்று ஆண்களுக்கும் சில வகையான குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக விந்து எண்ணிக்கை குறைவு, ஆண்மை குறைவு, மலட்டு தன்மை போன்ற பல கோளாறுகள் குழந்தை பெற தடையாக உள்ளது. இதற்கு அருமையான தீர்வு மருத்துவ குணங்கள் கொண்ட சில வகை விதைகள்தான். அவற்றின் முழு பயன்பாட்டை பற்றி நம் பதிவில் தெரிந்து கொள்வோம்.

கொத்தமல்லி விதை :- விந்து கோளாறு உள்ளவர்கள் நம்ம முன்னோர்கள் கடைபிடித்த இந்த மருத்துவத்தை கடைபிடியுங்கள். இது உடனடியாக நல்ல பலனை தர வல்லது. கொத்தமல்லி விதைகளை நன்றாக பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து கோளாறுகள் குணமடையும். மேலும் உடலுக்கு அதிக பலத்தையும் தரும்.

boys secret

புளியங்கோட்டை :- புளியங்கோட்டையை எடுத்து அதன் தோலை தட்டி விட்டு, வெறும் கொட்டையை மட்டும் நன்கு காய வைத்து, பொடி செய்து கொள்ளவும். இதனை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும். மேலும் உடல் வலிமை அதிகரிக்க செய்யும்.

boys secret

துளசி விதை :- அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் இந்த துளசி ஆண்மை குறைபாட்டிற்கும் பயன்படுகிறது. துளசியின் விதைகளில் விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தன்மை உள்ளது. 50 கிராம் துளசி விதைகளை எடுத்து கொண்டு, அதனுடன் பனங்கற்கண்டு சிறிது சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு தினமும் அதிகாலையில் 100 மி.லி பாலில் 6 கிராம் அளவு இந்த பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பிரச்சினை குணமடையும்.

boys secret

உளுந்து :- ஆண்மை குறைவு சார்ந்த பல பிரச்சினைகளுக்கு உளுந்து அருமையான தீர்வு. பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் இந்த விதை நல்ல வைத்தியமாக உள்ளது. 20 கிராம் உளுத்தம் பருப்பை எடுத்து அதனை நெய்யில் வறுத்து, பின் அதனுடன் 250 மி.லி பாலை கலந்து நன்றாக கிளறி, வேக விட்டு மிதமான சூட்டில் இதனை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் விந்து எண்ணிக்கை அதிகரித்து உங்கள் இல்லற வாழ்வில் நலமாக இருக்கலாம்.

boys secret