அச்சச்சோ.. நைட்லாம் தூக்கம் வரலையா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! இந்த பிரச்சனைலாம் வர 100% வாய்ப்பிருக்கு..!!

அச்சச்சோ.. நைட்லாம் தூக்கம் வரலையா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! இந்த பிரச்சனைலாம் வர 100% வாய்ப்பிருக்கு..!!



teenage sleeping problems explanation

 

நமது உடல் சீராக இயங்க உணவும், ஆக்சிஜனும் எப்படி தேவைப்படுகிறதோ, அதேபோல உறக்கமும் மிக முக்கியமான ஒன்றாகும். நாம் நன்றாக உறங்காமல் இருந்தால் உடலில் ரசாயனமாற்றம் ஏற்பட்டு சமநிலையின்மை ஏற்படும். இதனால் அது சார்ந்த பிற பிரச்சனைகளும் ஏற்படும். இரவுநேரத்தில் போதிய உறக்கம் இல்லாதது பகல்வேளைகளில் எரிச்சலையும், அழுத்தத்தையும் உண்டாக்கும்.

நீண்டகால தூக்கம் இழப்பு, மனஅழுத்தம் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளுக்கும் வழிவகை செய்யும். உறக்கத்தில் சுரக்கும் ஹார்மோன் மனநல மற்றும் உரக்க சுழற்சியை கட்டுப்படுத்துகிறது. போதிய உறக்கமின்மை காரணமாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயநோய்களும் ஏற்படும். தூக்கமின்மை ரத்த ஓட்ட அமைப்பினை கட்டுப்படுத்துவதால் இந்த பிரச்சனை ஏற்படலாம். 

non sleeping

அதிகளவிலான நாட்களில் மூளை ஓய்வெடுக்காத பட்சத்தில், மனநலமானது கடுமையான அளவு பாதிக்கப்படும். பிரச்சனையை தீர்த்தல், உணர்ச்சியை கட்டுப்படுத்துதல், முடிவெடுத்தல் என்று எந்த செயலையும் செய்ய முடியாது. உறக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனையும் அதனால் தாங்க இயலாது. 

மனஅழுத்தமும் உடலில் ஏற்படும். அதேபோல நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கப்பட்டு, உடலின் ஆற்றலும். உடல் நலமும் பாதிக்கப்படும். நாளொன்றுக்கு 5 முதல் 6 மணிநேரம் மட்டுமே உறங்கும் நபர்களுக்கு, உயர்ரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கும். இது உறக்கம் உடலுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது.