அந்த விசயத்திற்கு ஏகபோகமாக கைகொடுக்கும் செவ்வாழைப்பழம்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
செவ்வாழைப்பழம் இயற்கையாக உடலுக்கு நன்மையை தரக்கூடியது. இது ஆண்மை குறைபாட்டை நீக்குவதற்கு அருமருந்தாகவும் அமைகிறது. உடலுக்கு முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் செவ்வாழையை உணவு சமைக்க நாம் உபயோகிக்கலாம்.
அதனை சாப்பிடுவதால் பிற்காலத்தில் பல பிரச்சனைகள் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செவ்வாய் பழம் சாப்பிட பல நன்மைகள் கிடைக்கும். அதில் உள்ள பொட்டாசியம் சத்து, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவை உடல் நலத்தை பாதுகாக்கிறது.
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழையை 48 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்து அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதிகள் 40 நாட்கள் செவ்வாழையை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
செவ்வாழைப்பழத்தில் உள்ள சத்து மலச்சிக்கல் பிரச்சனைக்கும், மூல நோய்க்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.