AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கிறதா.? உஷார்.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்.!
சிறு குழந்தைகளுக்கு குடல் புழுக்கள் உருவாவதை நாம் அனைவரும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அது போல பெரியவர்களுக்கும் குடலில் புழுக்கள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்பதை நாம் உணர மறுக்கிறோம். சிலர் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருந்தாலும் கூட பசி அவர்களுக்கு அதிகமாக எடுக்கும். இதற்கு காரணம் குடலில் இருக்கும் புழுக்கள் நம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தில் குறுக்கிடுகின்றன என்பது தான்.
இதன் காரணமாக நமது ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. அதாவது, அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி எடுத்து நமக்கு குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இதனால், உடலில் அதிகப்படியான பசி ஏற்படுகிறது. பசி அடங்கவில்லை என நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டாலும் கூட குடல் புழு அதிகரிக்க கூடிய அபாயம் இருக்கிறது.
குடல் புழுக்கள் இருக்கக்கூடியவர்களுக்கு தோல் வெடிப்புகள், அரிப்பு, முகத்தில் கொப்புளங்கள் போன்றவை உருவாகின்றன. தோலில் தடிப்பு மற்றும் புண்கள் வெளிப்படையாகவே நன்றாக தெரியும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் கண் மை.! இவ்வளவு ஆபத்தா.? பெற்றோர்களே, உஷார்.!

இது குடல் புழுக்களின் எதிரொலியாக இருக்கலாம். மேலும், இந்த குடல் புழுக்கள் விட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற ஏற்றத்தாழ்வுகளை சருமத்தில் ஏற்படுத்தி நம் அழகை கெடுப்பதுடன் பல்வேறு தோல் நோய்களுக்கு வழிவகை செய்கின்றன.
குடல் புழு தொற்று இருப்பவர்கள் வயிறு வீக்கமாக இருப்பது, வயிற்று வலி, குமட்டல், வாயு பிரச்சனை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். மேலும், திடீர் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படும். சில வகை புழுக்கள் நமக்கு உடல் முழுவதும் பெரிய அரிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட குடல் புழு மிக முக்கிய காரணியாகும். தொடர்ந்து, இந்த குடல் புழுக்கள் உடலில் இருப்பதால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடலை பெரிய அளவில் பாதிக்க செய்கிறது.
எனவே, மருத்துவர்களின் அறிவுரையின் குடல் புழு மாத்திரைகளை சீரான இடைவெளியில் பேரில் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன் பல்வேறு உடல் கோளாறுகளில் இருந்து நம்மை தப்பிக்கச் செய்யும்.