குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் கண் மை.! இவ்வளவு ஆபத்தா.? பெற்றோர்களே, உஷார்.!



Disadvantages of Kajal for newborn babies

குழந்தைகளுக்கு கண் மை இடும் பழக்கம் காலம் காலமாக நம் நாட்டில் இருந்து வருகின்றது. இது அழகுக்காக மட்டுமல்லாமல் பிறரின் கண் படுவதில் இருந்து குழந்தைகளை காக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், மருத்துவ ரீதியாக இதுபோல குழந்தைகளுக்கு கண் மை பயன்படுத்தும் பழக்கம் பெரும் ஆபத்தில் முடியும் என்று கூறப்படுகிறது. 

பெரும்பாலும், நாம் வீடுகளில் தயாரிக்காமல் கடைகளில் இருக்கக்கூடிய கண் மைகளை தான் பயன்படுத்துகின்றோம். அந்த மை சுத்தமாக தயாரிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் கிருமிகள் குழந்தைகளின் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கண்ணில் புண், நீர்த்தாரை சிவந்து விடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

கண்ணிற்குள் கண்மை கலக்கும் போது கண் வீக்கம், கண்குழாய் அடைப்பு, அழுக்குகள் கண்களில் தேங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படிங்க: சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் இதை செய்யுங்கள்.. பலன் நிச்சயம்.!

Disadvantages

மேலும், கண் மையில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் பார்வை நரம்பையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் தோலானது மிக மிக மென்மையானது. 

அவர்களின் மென்மையான சருமத்தில் கண்மை இடுவது தோல் பிரச்சினைகளையும், குழந்தைக்கு ஏற்படுத்தி அலர்ஜியை தரலாம். குழந்தைகள் கண்மையை சில நேரங்களில் கையால் தேய்த்து வாயில் வைக்கக்கூடும். இப்படி கண்மை உடலுக்குள் செல்வது அவர்களுக்கு வயிற்று பிரச்சனை மற்றும் மூச்சு திணறல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

குழந்தைகளுக்கு நன்மை என்று நினைத்து நாம் போடக்கூடிய கண் மை அவர்களுக்கு உயிருக்கே ஆபத்தை கொடுக்கக்கூடும். எனவே, மருத்துவர்களின் அறிவுரையை கேட்டு குழந்தைக்கு கண்மை போடாமல் இருப்பது மிகவும் நல்லது. குழந்தைக்கு அழகை விட பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

இதையும் படிங்க: பழம் நல்லது தான்.. ஆனா அதை இப்டி சாப்பிட்டா அது ஆபத்தை தரும்.. உஷார்.!